Thursday, 16 September 2010

நாஜிகளின் கொடுமை

skip to main | skip to sidebar
Meaning of living

Saturday, July 10, 2010
நாஜிகளின் கொடுமை
நான் சமீபத்தில் "A Boy in the Striped Pajama? என்ற ஹாலிவுட் படம் பார்க்க நேர்ந்தது. பிரௌசரில் அலைந்துகொண்டிருந்தபோது இப்படத்தை பற்றி அறிய முடிந்தது. படத்தின் முடிவும் படத்தை கொண்டு சென்றிருந்த நேர்த்தியும் அபாரம். தமிழ் ரசிகர்களின் ரசனையும், தயாரிப்பாளர்களின் சமூக அக்கறையும் கவலைதருகிறது. எப்போது நமது ரசனை காதலையும், சண்டையையும் தாண்டிசெல்லும் என்று தெரியவில்லை. கதை இருசிருவர்களை பற்றியது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளின் பார்வையிலேயே காட்சிவயப்படுதப்படுள்ளன இது படத்தின் சிறப்பு அம்சமாகும். தமிழிலில் 'பசங்க' படத்தில் இந்தக்கருதொட்டத்தில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தார்கள் எனபது எனது அபிப்ராயம். படத்தின் கதை இரண்டாம் உலக போர் நடந்த களத்தை அடிபடையகக்கொண்டது. நாஜிகளின் கொடூர முகத்தை மென்மையான குழந்தைகளை வைத்து அற்புதமாக ஆவணப்படுதயுளர்கள். கதைநாயகனின் விளையாட்டு ஆர்வத்துடன் துவங்கும் திரைப்படம் அங்குலம் அங்குலமாக கதையின் மையத்தை நோக்கியும் முடிவை நோக்கியும் தேர்ந்த சிற்பியின் உளியால் செதுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையை விளக்க சிறுவர்களை மைய்யபடுத்தி கதைக்களத்தை கையாண்டிருப்பது ஒரு நகைமுரண். படத்தின் சிறப்பே அதன் முடிவை நோக்கி ஆழமாகவும், அனேக பரிமாணங்களுடனும் நகர்வதுதான்.

பதவி உயர்வுக்காகவும் யூதர்கள் மேல் கொண்ட வெறுப்பினாலும் செய்யும் வேலையை ஆர்வத்துடன் செய்ய முயற்சிக்கும் தந்தை ஒரு பரிமானம் என்றால், மகன் மேல் பாசத்தையும் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுடனும் வாழும் தாய் மற்றுமொரு பரிமானம், இதையெல்லாம் தவிர்த்து நடந்து கொண்டிருக்கிற
நாட்களிலேய அதன் முழு சுவையை அனுபவிக்கத் துடிக்கும் மகன் அது கிடைக்காமல் போகும்போது தவிக்கும் அவனது நிலை மற்றுமொரு பரிமானம். இடையிடையே அதிகாரவர்க்கத்தின் அகங்கராம் பட்டவர்த்தனமாக வீட்டு அலுவல்களை கவனிக்கும் இன்னொரு அதிகாரியின் பாதிரபட்டைப்பு மூலமாக மற்றுமொரு பரிமாணமாக வெளிப்பட்டுள்ளது. கண்காணிப்பு முகாமிலிருக்கும் சிறுவன், வீட்டில் நடைபெறும் விருந்தில் வேலை செய்வதற்காக அழைத்து வரபடுகிறான், அங்கு அவனை காணும் நமது கதாநாயக சிறுவன் அவனுக்கு ஒரு கேக்கை கொடுக்கிறான், அதை சாப்பிடும் போது அதிகாரியினால் தவறாக (திருடியதாக) புரிந்து கொள்ளப்பட்டு அடிஉதைக்கு ஆளாகிறான். இவன் கதையின் பிறிதொரு பரிமானம். படம் நகர்வதில் இவனது பாத்திரத்திற்கு பெரும் பங்கு உள்ளது.

வீட்டில் விளையாட முடியாமல் போரடிதுக்கொண்டிருக்கும் சிறுவன் வீட்டின் பின்புற வாசல் வழியாக செல்கிறான், அந்த பாதை அவனை அருகிலிருக்கும் அவனது தந்தையின் கட்டுப்பாட்டிலுள்ள வதை முகாமிற்கு அழைத்து செல்கிறது அங்குதான் அவன் கோடுபோட்ட வெள்ளைநிற பைஜாமா அணிந்த சிறுவனை காண்கிறான். இவர்களுக்கிடைய நடப்பு வளர்கிறது. இவன் போய் பைஜாமா சிறுவனை சந்தித்துவிட்டு வருவது வீட்டில் யாருக்கும் தெரியாது. இதனிடையில் சிறுவனின் தாய் தனது கணவனின் உண்மையான வேலையை தெரிந்து கொள்ள நேரிடுகிறது, அதுவரை அவளுக்கு உண்மை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது கணவனின் உண்மையான சொருபத்தை கண்ட மனைவி அது தனது மகனின் எதிர்காலத்தை படிக்கும் என்று கருதுகிறாள் வேலையை உதற சொல்லும் அவளது வேண்டுகோள் கணவனால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவள் இனிமேல் அவனுடன் வாழ்வது தனது மகனின் எதிகாலத்தை கெடுக்கும் என்று முடிவு செய்து கணவனை விட்டு விலக முடிவு செய்கிறாள். இந்நிலையில் இதைஏதும் சிறுவன் அறியாத சிறுவன் தந்து நண்பனை காண செல்கிறான். அங்கு அச்சிருவனோ தனது தந்தை இரண்டு நாட்களாக முகாமில் காணப்படவில்லை என்றும் தான் அவரை தேடி செல்வதாகவும் கூற இவனும் தானும் அந்த முயற்சியில்கலந்து கொள்ள முடிவு செய்து அவனுடனேயே முகாமிற்குள் செல்கிறான், இந்நிலையில் சிறுவனின் ராணுவ தந்தையின் உத்தரவின் பேரில் முகாமில் உள்ள நாஜி படையினர் யூத கைதிகளை விஷ வாயு அறையில் அடைத்து கொல்வதற்காக மாடுகளை போல் விரட்டி செல்கின்றனர், இந்த அமளியில் சிறுவர்கள் இருவரும் அகபட்டுகொண்டு அவகளுடனே இழுத்து செலப்படுகின்றனர், இதற்கிடையில் மகனை தந்தையிடம் இருந்து பிரித்து செல்வதற்காக தாய் அவனை தேடுகிறாள். அவள் தேடுவதைப் பார்த்து தந்தையும் தேட ஆரம்பிக்க மெதுவாக அவர்கள் சிறுவன் சென்ற வழியிலேயே தேடிக்கொண்டுவர வதை முகாமின் கம்பி வலைகளினுடே பையனின் உடுப்புகளை கண்டுபிடிகிறார்கள். பதறிப்போன தந்தை நிலைமையின் வீபரீதத்தை உணர்ந்த தந்தை தான் நிறைவேற்ற சொன்ன உத்தரவை நிறுத்த ஓடுகிறான் இதற்குள் எல்லா கைதிகளுடனும் கொலையரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் பேந்த பேந்த முழித்தவாறு அங்குமிங்குமாக அலைந்து கொண்டு இருகிறார்கள், வெளியேயோ தாயும் தந்தையும் சிறுவனின் நிலையை அறியாமல் தவித்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்க்குளாகவே கொலையரை புகைபோக்கிலிருந்து புகை வர ஆரம்பிக்கிறது. சூழ்நிலையின் விளைவை புரிந்துகொண்ட தந்தை வெடித்து அழுகிறான் தாயும் ஒருவாறு நடந்ததை புரிந்து கொண்டு வேதனையில் துடிக்கிறாள். அத்துடன் படத்தையும் முடித்துவிடுகிறார்கள். நமக்கும் இதயம் கனக்கிறது.
மொத்த திரைக்கதையும் அதிர்ச்சியான முடிவை நோக்கி மென்மையாகவும் அதே நேரத்தில் ஆழமான தாக்கத்துடனும் நகர்கிறது. படம் பர்ப்பவகளின் இதயங்களில் ஆழ்ந்த பதிவையும் கொடூரங்களின் உச்சங்களையும் ஏற்படுத்திவிட்டு செல்கிறது. படத்தின் 90 % பகுதி சிறுவர்களின் உணர்சிகளை மையப்படுத்தியே காண்பிக்கபடுகிறது. படத்தின் முடிவில் ஒரு நல்ல திரைபடத்தை பார்த்த அனுபவத்தை எற்படுதிள்ளர்கள். அவசியம் பார்க்கவேண்டிய படம்.
Posted by Siva.../ at 6:04 PM
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
0 comments:

Post a Comment

Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Facebook Badge
Sivakumar Kalidasan

Create Your Badge
Followers
Blog Archive

* ▼ 2010 (1)
o ▼ July (1)
+ நாஜிகளின் கொடுமை

* ► 2009 (1)
o ► October (1)
+ Experience & Imbibe

About Me
My Photo

Siva.../
Simple but thinking different - person

View my complete profile

No comments:

Post a Comment